(கதையைச் சொன்னது : திருகுறுங்குடி கமலம்மாள்)
ஒரு நாள் மாலை வேளையில் சுப்புத்தாய் என்ற கிழவி தன் நண்பி செல்லத்தாயி கிழவியின் நாளை நான் ஒரு திருமணத்திற்கு போக வேண்டும்; உன்னுடைய பாம்படத்தை (ஒரு வகை தொங்கும் காதணி) தா. நான் போய்விட்டு வந்து தர்கிறேன் என்றாள். கிழவி உடனே தருவதற்காகக் கழற்றப் போனாள். உடனே இந்தக் கிழவி இப்போது வேண்டாம், இரவல் நகையை வீட்டில் வைக்க பயமாக இருக்கிறது. நாளை அதிகாலை வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிச் சென்று விட்டாள்.
***
நடு இரவில் கதவு தட்டப்பட பாம்படம் வாங்கிச் செல்ல கிழவி வந்துவிட்டாள் என நினைத்துக் கதைவைத் திறந்தாள். கிழவி நின்றிருந்தாள். பாம்படத்தைக் கழட்டி கையில் கொடுத்து விட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட கதவைத் திறந்தால், அதே கிழவி பாம்படத்தைக் கேட்டு நிற்கிறாள். இப்போதானே என் பாம்படத்தை வாங்கிச் சென்றாய் என முதல் கிழவி கேட்க, இரண்டாவது கிழவி என்ன உளறுகிறாய், நான் இப்போதானே வருகிறேன், நீ வேறு யாரிடமோ பாம்படத்தைக் கொடுத்து விட்டாய் போலிருக்கிறது என்கிறாள். எனவே முதல் கிழவி தன்னுடைய பாம்படத்தைத் தோழி கிழவி வேடத்தில் வந்து நடு இரவில் பேய் தான் வாங்கிச் சென்றிருக்கிறது என ஊகித்து இடுகாட்டுக்குப் பேயைப் பார்க்கச் செல்கிறாள்.
***
இடுகாட்டில் நிறைய பேய்கள் இந்தக் கிழவியின் பாம்படத்தை பந்து போல் ஒன்றுக்கொன்று தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கிழவி சற்று நேரம் கூர்ந்து கவனிக்கிறாள். பேய்கள் ஆடைகளற்று நிர்வாணமாக இருப்பதை உணர்கிறாள். உடனே தானும் தன் ஆடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகச் சென்று அந்தப் பேய்களோடு கலந்து கொண்டாள். ஒவ்வொரு பேயாக பாம்படத்தைப் போட்டு விளையாடும்போது இந்தக் கிழவியின் முறை வரும்போது, இவள் கைக்குப் பாம்படம் வருகிறது. உடனே பாம்படத்துடன் ஊரைப் பார்க்க ஓடி வந்து விட்டாள். விடிந்து விட்டதால் பேய்களால் கிழவியைப் பின் தொடர இயலவில்லை. கிழவி வீடு போய்ச் சேர்ந்தாள்.
Subscribe to:
Post Comments (Atom)
:-)
ReplyDeleteகமலம்மாள் பாட்டிக்கு கால் இருந்ததான்னு பார்த்தியா?
கமலம்மாள் பாட்டிக்கு கால் இருந்ததான்னு பார்த்தியா?...
ReplyDelete:--)))
முதலில் வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்...அப்போதுதான் பாம்படத்தை வேகமாக கை மாற்ற முடியும்..
ReplyDelete