நாய்களுமற்ற நடுநிசியில்
நகர்ந்து கொண்டிருந்தான்.
சாலையோரத்தில்
சோமுப் பண்டாரமா?
நிலைத்த விழிகளில்
கடந்த காலம் கனிந்திருந்தது.
அசையாத் தவமிருக்கும்
அரசமரத்திண்டில்
இரவுக்கடையின் இறுதித்தட்டு
கழுவும் ஓசை
செல்லச்செல்ல, மெல்லமாய்த்
தேய்ந்தது.
சாக்கடையோரம் சலனமற்றுத்
தூங்கின
அரைப் பிறை வெளிச்சத்தில்
அவசரக் குழந்தைகள்.
சிறிய அசைவுகளுடன்
பெரிய குழந்தைகள்.
விடிந்து விடாதிருக்க
இரவை வேண்டின
விழிகளில் வண்ணம் மின்ன
ஒப்பாரில்லா ஒப்பாரியுடன்
இரட்டைப் பூனைகள்.
தவிக்கும் தவளைகளின் சத்தத்திற்கு
இடம் பெயர வழியறியா
வலம் புரிப் பிள்ளையார்,
கிரில்லில் சிக்கிய பெருச்சாளி
ரத்தம் பார்த்துக் கொண்டு.
எதிர் வரும் பிம்பமறியா
பிரமையுடன்
மௌனமாய் நடந்தான்
மௌனியின் நாயகன்.
Subscribe to:
Post Comments (Atom)
டேய் ராஸ்கல்!..
ReplyDeleteஎன்னடா இந்த கொல்லு கொல்லுற.அருமையான இடம் இருக்குடா,வலை உலகில் உனக்கு.
வா.. வா.. வாழ்த்துகள்டா பயலே!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDelete