Monday, January 18, 2010

தவறுகளின் காலம்

செய்யாதவற்றை எல்லாம்
செய்யாத தவறென்றால்
தவறு செய்யாதது தவறா?
தவறாகிப் போனது
செய்தது எல்லாம்.
இப்படியும்
இருக்க வேண்டியுள்ளது
சித்தப் பிரமையின்
சித்தமானது போல.
வேளா வேளைக்கான
உணவில் உறங்குகிறது,
பாழாய்ப் போகாத வேளை.
போதும் வேளையில்
பொழுது நிற்கிறது
நீட்சியான வாழ்வின்
வலது கரம் போல.

1 comment:

  1. பிடிச்சிருக்குடா.

    ஆனால் உன் வாசிப்புகளுக்கு இணையாக இல்லை.

    ReplyDelete